#Breaking ஒரே மேடையில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் - அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது!!

 
tn

பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி தொடங்கியது.

rn

அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்க திட்டமிட்டிருந்தார்.  இந்த சூழலில் அதிமுக பொதுக்குழு நடத்த கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பொதுக்குழு நடத்த தடையில்லை என்று தெரிவித்திருந்தது.  இருப்பினும் இது குறித்து மேல்முறையீடு செய்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் பொதுக்குழுவில் ஓபிஎஸ் ஒப்புதல் தெரிவித்த 23 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்படவேண்டும் . தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட கூடாது என உத்தரவிடப்பட்டது . இதனால் எடப்பாடிபழனிசாமி ஒற்றை தலைமை ஏற்கும் கனவு தற்போது தகர்ந்துள்ளது.இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பன்னீர்செல்வத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.  பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு வந்த ஓபிஎஸ்-க்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டதுடன் ஒபிஎஸ் வெளியேற வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

tn

இந்நிலையில்  அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் தொடங்கியது . ஒரே மேடையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ .பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அமர்ந்துள்ளனர். பொதுக்குழுவை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் நடத்துவதற்கு பன்னீர்செல்வம் முன்மொழிந்தார் . பன்னீர்செல்வம் முன்மொழிந்தது எடப்பாடிபழனிசாமி வழிமொழிந்தார்.