கோவையில் அதிமுக மேயர் வேட்பாளர் தோல்வி

 
ko

 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாநகராட்சி கோவை மாநகராட்சிக்கு தான்.  எஸ். பி .வேலுமணிக்கும் செந்தில்பாலாஜிக்கும்  பெரும் போட்டி நிலவி வந்தது.  

கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி,   7 நகராட்சி,  33 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது.   811 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பெரிய நேகமம் பேரூராட்சியில் 9 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.   பெரிய நெகமம் பேரூராட்சி போட்டியின்றி பெரும்பான்மை பலத்துடன் திமுக கைப்பற்றியது.  இதனால் மீதமுள்ள 802 பதவிகளுக்கு கடந்த 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.   3 ஆயிரத்து 366 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

 இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது .   கோவை மாநகராட்சியில் இதுவரைக்கும் திமுக 8 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.   அதிமுக இன்னும் வெற்றிக் கணக்கை துவங்கவில்லை.

p

கோவை மாவட்டத்தின் பேரூராட்சிகளில் 100 இடங்களில் திமுக வெற்றி பெற்றிருக்கிறது.  அதிமுக 2 6 இடங்களிலும்,  காங்கிரஸ் 4 இடங்களிலும்,  சுயச்சை ஐந்து இடங்களிலும்,  மதிமுக ஒரு இடத்திலும்,  சிபிஎம் ஒரு இடத்திலும்,  தேமுதிக ஒரு இடத்திலும் , பாஜக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

 கோவையில் பேரூர் பேரூராட்சியை  திமுக கைப்பற்றியது.   இதில் மொத்தம் 15 வார்டுகளிலும் திமுக 13 வார்டுகளையும், அதிமுக இரண்டு இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றன.  கோவையில் தற்போது வரைக்கும் திமுக மூன்று பேரூராட்சிகள் ஒரு நகராட்சியை கைப்பற்றியிருக்கிறது.   இந்த நிலையில் கோவை மாநகராட்சி மேயர் தேர்தல் அதிமுக மேயர் வேட்பாளராக அறியப்பட்ட கிருபாளினி கார்த்திகேயன் தோல்வி அடைந்திருக்கிறார்.

 கோவை மாநகராட்சியின் 7வது வார்டில் திமுக வேட்பாளர் கோவிந்தராஜன் வெற்றி பெற்றிருக்கிறார்.   அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக மேயர் வேட்பாளராக அறியப்பட்ட கிருபாளினி கார்த்திகேயன் தோல்வி அடைந்திருக்கிறார்.