#BREAKING குற்றாலம் பேரூராட்சியை கைப்பற்றிய அதிமுக!!

 
tn

தென்காசி மாவட்டம் குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4 ஆம் தேதி நடைபெற இருந்தது. இதை தொடர்ந்து அங்கு அதிமுக - திமுக நிர்வாகிகள் மத்தியில் மோதல் ஏற்பட்டதால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து இரண்டாவது முறையாக கடந்த மார்ச் 26ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. போதிய உறுப்பினர்கள் வருகை தராததால் மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

tn

இதன் பின்னர்  தேர்தல் கடந்த 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் குற்றாலம் பேரூராட்சி தேர்தல் வருகின்ற (25 ஆம் தேதி) இன்று  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.  டி.பி.313 குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சி, பேரூராட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக பேரூராட்சி உறுப்பினர்களின் கூட்டம் 9.30  மணிக்கு குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெறும். இப்பதவி தொடர்புடைய தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 5/1920-ன் ஓதுக்கீடு ஒதுக்கப்படாதவை பொது 2006 ஆண்டு தமிழ்நாடு பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் (தேர்தல்கள்) விதிகளின் விதி 98, 99ன் படி நடத்தப்பெறும்.  குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சி அலுவலக மன்ற கூட்ட அரங்கில் நடைபெறும் தேர்தலுக்கு பேரூராட்சி அனைத்து வார்டு உறுப்பினர்கள்  தவறாமல் கலந்து கொள்ளவேண்டும் என்று தேர்தல் அதிகாரி  வலியுறுத்தி இருந்தார். 

election


இந்நிலையில் குற்றாலம் பேரூராட்சி தலைவராக அதிமுகவை சேர்ந்த கவுன்சிலர் கணேஷ் தாமோதரன் 5 வாக்குகள் பெற்று தேர்வாகியுள்ளார்.  திமுக கவுன்சிலர் பாண்டியன் 3 வாக்குகள் பெற்றார். குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் போதிய உறுப்பினர்கள் பங்கேற்காததால் 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.  இந்த சூழலில் 3 ஆவது  முறையாக தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில் குற்றாலம் பேரூராட்சியை கைப்பற்றி அதிமுக வரலாற்று சாதனை படைத்துள்ளது.