ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ அமைக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவக் குழு மாற்றியமைப்பு..

 
ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ அமைக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவக் குழு தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.  

 கடந்த 2017 ஆம் ஆண்டு  முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதாவின் மரணம்  தொடர்பாக விசாரணை நடத்த  ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில்  விசாரணை ஆணையத்தை தமிழக  அரசு அமைத்தது.  ஓராண்டுக்கும் மேலாக   ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் அப்பல்லோ மருத்துவர்கள் , செவிலியர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் சாட்சிகள் என 154 பேரிடம்  விசாரணை நடத்தியது.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்

ஆனால் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு  தடை கோரியும்,  தங்களது மருத்துவர்களுக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரியும் அப்பல்லோ நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.  அதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், விசாரணை ஆணையத்துக்கு உதவ மருத்துவர்களை தேர்வு செய்து அறிவிக்க வேண்டும் என எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக   8 உறுப்பினர்கள் கொண்ட மருத்துவக் குழுவை  விசாரணை ஆணையத்திற்கு உதவ எய்ம்ஸ் நியமித்திருக்கிறது.
 
எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில், மருத்துவர்கள் ராஜீவ் நரங், ஆனந்த் மோகன், விமிரிவாரி,  நிதிஷ் நாயக்,  வி.தேவ கவுரோ ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக அதில் இடம் பெற்றிருந்தனர்.  மருத்துவர்  அனந்த் நவீன் ரெட்டி, உறுப்பினர் செயலராகவும், டாக்டர் விஷால் போகாட் பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டனர். 

ஜெ. மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்துக்கு 8வது முறையாக அவகாசம் நீட்டிப்பு!

இந்நிலையில் இன்று காலை  அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆறுமுகசாமி ஆணையம்  சென்னை எழிலகத்தில் ஆலோசனை நடத்தியது.  இதில் அப்பல்லோ மருத்துவமனை வழக்கறிஞர்கள், சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர். ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஏற்கனவெ 90% முடிவடைந்த நிலையில்,  அடுத்தக்கட்டமாக யாருக்கும் சம்மன் அனுப்ப வேண்டும், யாரிடம் எவ்வாறு விசாரணை  நடத்தலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதில் எய்ம்ஸ் மருத்துவக் குழு காணொளி வாயிலாக பங்கேற்கும் எனக் கூறப்பட்டது.  ஆனால்  ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ ஏற்கனவே அமைக்கப்பட்ட  8 பேர் கொண்ட  மருத்துவக்குழு மாற்றியமைத்து எய்ம்ஸ் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.  மருத்துவர் சந்தீப் சேத் தலைமையில் 6 பேர் அடங்கிய புதிய குழு  அமைக்கப்பட்டுள்ளது.