உதயநிதியை அமைச்சராக்குவதில் ஏன் இவ்வளவு அவசரம்? - டிடிவி தினகரன் கேள்வி

 
ttv

உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார் என தெரியவில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். 

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே டிடிவி தினகரன் தஞ்சையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களோடு இணைந்து கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். 

ttv dinakaran

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியிருப்பதாவது:- ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஒரணியில் இணைய வேண்டும். அப்படி இணைந்தால் தான் தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த முடியும். எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர் இல்லை என்பதை பல இடங்களில் நிருபித்து வருகிறார். உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவதில் தவறில்லை. ஆனால் ஏன் இவ்வளவு அவசரத்தில் அமைச்சராக்க மு.க.ஸ்டாலின் நினைக்கிறார் என தெரியவில்லை. புதுச்சேரியில் தி.மு.க. ஆட்சி அமைய வாய்ப்பு இல்லை என்பது எனது கருத்து. தி.மு.க. தேர்தலில் கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதற்கான பதில் வருகின்றன பாராளுமன்ற தேர்தலில் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.