#BREAKING அண்ணா பல்கலை.,தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு

 
anna anna

அண்ணா பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

anna univ
டிசம்பர் 9, 10ஆம் தேதிகளில் தமிழகத்தில் மாண்டஸ் புயலின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக அண்ணாபல்கலை கழகத்தில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இதை தொடர்ந்து மாண்டஸ் புயல் காரணமாக, ஒத்தி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழக செமஸ்டர் தேர்வுகளுக்கான மறு தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, டிசம்பர் 9ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிச.24ம் தேதியும், டிசம்பர் 10ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிச.31ம் தேதியும் நடைபெறும் என அண்ணா பல்கலைகழகம் அறிவித்தது.

anna university

இந்நிலையில் புயல் காரணமாக டிசம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் ஜனவரி 19-ல் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.  டிசம்பர் 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் ஜனவரி 20ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.