10,12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு...பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு முறை ரத்து!

 
schools open

வேலைவாய்ப்புக்காக மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே பதிவு செய்யும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

school

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் தங்கள் கல்வி தகுதிகளை படித்த பள்ளிகளிலேயே வேலை வாய்ப்பு துறை இணையதளத்தில் பதிவு செய்யும் வசதியை தமிழக அரசு 2011 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தியது . வேலைவாய்ப்பு அலுவலகங்களில் உள்ள கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்து அனைத்து மாணவர்களுக்கும் ஒரே பதிவு எண் வழங்கப்பட்டு வந்தது.இந்த சூழலில் 10 , 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் https://www.tnvelaivaaippu.gov.in/Empower/ என்ற இணையதளத்தில் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்து கொள்ளலாம் என்றும் இதுவரை பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு செய்து வந்த நடைமுறை ரத்து செய்யப்படுவதாகவும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

tn

பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி மூன்று வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு செய்தல் குறித்த எந்த அறிவிப்பும் பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில் வெளியிடப்படவில்லை . இதனால் இந்த நடைமுறை கைவிடப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.  மதிப்பெண் சான்றிதழ் உடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இணையதளத்தின் மூலமாகவோ, நேரடியாகவோ,  இ- சேவைகள் மையமாகவோ மாணவர்கள் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.