பைக்கில் ஹெல்மெட் அணியாத போலீசார் மீது நடவடிக்கை - தமிழக டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை!!

 
tn

இருசக்கர வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் அணியாத காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

dgp sylendrababu

தமிழகத்தில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக இருசக்கர வாகனத்தில் பின்புறத்தில் அமர்ந்து செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டும் என போக்குவரத்து காவல்துறை வலியுறுத்தி வருகிறது.  அவ்வாறு ஹெல்மெட் அணியாதவர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. வாகன சோதனையின் போது சிக்கும் நபர்கள் அபராதமாக  ஆயிரம் ரூபாயை செலுத்தி வருகின்றனர். இந்த சூழலில் காவலர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர் சமீபத்தில் காவலர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல்  சென்றதை ஒருவர் கேட்டபோது தான் காவலர் அதனால் தான்  ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அவசியம் இல்லை என்று அவர் கூறிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.

tn

இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு , பொதுமக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டிய காவல்துறையினர் பெரும்பாலானோர் ஹெல்மெட் அணிவது இல்லை. ஹெல்மெட் அணியாமல் பணிக்கு வந்த போலீசாரிடம் வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் . ஹெல்மெட் வாங்கி வந்த காண்பித்த பின் தான் வாகனத்தை ஒப்படைக்க வேண்டும்.  போலீஸ் என்ற அடையாளத்தை காரணமாக கூறி வாக்குவாதம் செய்வோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் . இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர் ஹெல்மெட் அணிவது கட்டாயம்.  மீறினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.  சென்னை ,திருச்சி ,மதுரை உள்ளிட்ட நகரங்களில் 90 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுகின்றனர்.  வாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசாருக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு கேட்டுக் கொண்டுள்ளார்.