#BREAKING "பழனிசாமி தரப்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" - அமைச்சர் துரைமுருகன்

 
duraimurugan

ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் உண்மை வெளியாகும் என்பதால் அமளி என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

duraimurugan

தமிழக சட்டப்பேரவையில் இன்று எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.  உதயகுமார் அங்கீகரிக்க கோரி விளக்கங்களை எழுப்பி அமலில் ஈடுபட்டனர்.  தொடர் அமளியின் காரணமாக பேரவை தலைவர் அப்பாவு அதிமுக எம்எல்ஏக்களை  வெளியேற்ற காவலர்களுக்கு உத்தரவிட்ட நிலையில் அவர்கள் குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர் . இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. 

Stalin and eps

இதையடுத்து பேசிய சட்டப்பேரவை அவை முன்னவர் துரைமுருகன்,  இன்றைய தினம் சட்டப்பேரவையில் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையும் , அருணா ஜெகதீசன் ஆணை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இந்த அறிக்கைகளை தாக்கல் செய்தால் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இவர்கள் செய்த அநீதிகள் வெளியே வரும்.  அதற்கு பதில் சொல்ல முடியாத  காரணத்திற்காக இவர்கள் நாடகத்தை ஆடுகிறார்கள் என்று கூறினார்.

duraimurugan

அத்துடன் தொடர்ந்து பேசிய அவர் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் கொண்டு வரும் வேளையில் உடம்பில் தமிழ் உணர்ச்சி இருக்குமேயானால் , தன்மான ரத்தம் ஓடுமேயானால் இவர்கள் அவையில் இருந்திருக்க வேண்டும் என்றும் அவர் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொண்டார்.