#BREAKING கள்ளக்குறிச்சி: மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ்

 
anbil magesh

கள்ளக்குறிச்சி தனியார் மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

tn

கள்ளக்குறிச்சி கனியாம்பூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி கடந்த 13 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.  மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்திய நிலையில் போராட்டத்தில் கலவரம் வெடித்தது.  இதில் பள்ளி பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன,  மற்றும் பள்ளியில் இருந்த மாணவர்களின் சான்றிதழ்கள் அனைத்தும் எரிக்கப்பட்டன. இந்த விவகாரத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் , கலவரத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டுசட்டத்தின் முன் நிறுத்த உத்தரவிட்டுள்ளது.அதேசமயம் அப்பள்ளியில் படித்து வரும் 4500 மாணவர்களின் நலனை கருதி அவர்களை வேறு பள்ளியில் கல்வியை தொடரவோ அல்லது அப்பள்ளிலேயே கல்வியை தொடர  நடவடிக்கைகள் எடுக்கவும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.இந்த சூழலில் கள்ளக்குறிச்சி மாவட்டம், தனியார் பள்ளியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாகவும், பள்ளியின் சேதம் குறித்தும், அமைச்சர்  அன்பில் மகேஷ் நேரில் சென்று நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

tn

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்த போது, கள்ளக்குறிச்சி சம்பவத்தின்போது மாணவர்களின் சான்றிதழ்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், திரும்ப வழங்க வருவாய்த்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.   கனியாமூர் பள்ளி வன்முறையில் சேதமடைந்த சான்றிதழ்களுக்கு பதிலாக மாணவர்களுக்கு புதிய சான்றிதழ் வழங்கப்படும்.  உடனடியாக சான்றிதழ் தேவைப்படும் மாணவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். மாணவர்களின் எதிர்காலம் பற்றி முதலமைச்சருடன் கலந்தாலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.