புத்தாண்டு என்பது நம்பிக்கையைப பற்றிக்கொள்ளும் ஒரு சந்தர்ப்பம் - கமல்ஹாசன் வாழ்த்து

 
kamal

ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழக மக்களுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

2023 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும், நாடு முழுவதும் மக்கள் குடும்பத்துடன் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். பட்டாசு வெடித்து மக்கள் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். பிறந்துள்ள 2023 ஆங்கில புத்தாண்டு அனைவரின் வாழ்விலும் நன்மை, மகிழ்ச்சியை கொண்டு வர வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.  ஆங்கில புத்தாண்டையொட்டி பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழக மக்களுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, ஆண்டுக் கணக்கில் ஒன்று கழிந்தது. புதிய ஒன்று நம்பிக்கை வாசல் வழியாகப் புகக் காத்து நிற்கிறது. திட்டங்கள் உருவாகட்டும். அவற்றைச் செயலாக மாற்றும் ஊக்கம் பிறக்கட்டும். புத்தாண்டு என்பது நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும் ஒரு சந்தர்ப்பம். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். இவ்வாறு கூறியுள்ளார்.