அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்துக்கள் - திருப்பதியில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

 
rajinikanth

அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு திருப்பதிக்கு சென்றார். திருமலையில் தேவஸ்தான துணைச் செயல் அதிகாரி ஹரிந்திரநாத் அவரை வரவேற்று திருமலையில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்தார். தேவஸ்தானம் சார்பில் ரஜினிகாந்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு, பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த் அதிகாலையில், தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். 

சாமி தரிசனம் செய்துவிட்டு கோயிலுக்கு வெளியே வந்த ரஜின்காந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், உதயநிதிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.