ஜனநாயக கடமையாற்றிய பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்... எங்கேனு தெரியுமா?

 
ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 490 பேரூராட்சி என 649 நகர்ப்புற பதவிகளுக்கு தேர்தல் இன்று நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு மையங்களில் பலத்த பாதுகாப்புடன் மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றிவருகின்றனர். சினிமா பிரபலங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் மக்களோடு மக்களாக நின்று தங்கள் வாக்கை செலுத்தி வருகின்றனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விஜய் காலையிலேயே நீலாங்கரையிலுள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க வந்தார்.  அப்போது ரசிகர்களும் மக்களுகும் நடிகர் விஜய்யை சூழந்து கொண்டனர். வாக்குச்சாவடியே பரபரப்பாக காணப்பட்டது. இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விஜய்யின் வருகையினால் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் வாக்களிக்க வந்த பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். புகைப்படக் கலைஞர் ஒருவர் கால் தடுக்கி தவறி விழுந்தார். உடனே விஜய் கை கொடுத்து தூக்கிவிட்டு உதவினார். இது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது.

tn

கூட்ட நெரிசலால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுக்கு விஜய் வரிசையில் நின்ற வாக்காளர்களிடம் மன்னிப்பு கேட்டார். நடிகர் விஜய்யை போல நடிகர், நடிகைகள் பலரும் வாக்களிக்க அவர்கள் பகுதிகளிலுள்ள வாக்குச்சாவடிக்கு வந்தனர். அந்த வகையில் தியாகராய நகரில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய வாக்கை செலுத்தினார். அதேபோல நடிகர் அருண் விஜய் சென்னை ஈக்காட்டுத்தாங்கலிலுள்ள கிறிஸ்டியன் மேல்நிலைப் பள்ளியில் ஜனநாயக கடமையாற்றினார்.