"மீனாவின் கணவர் கொரோனாவால் உயிரிழக்கவில்லை" - அமைச்சர் விளக்கம்!!

 
Ma Subramanian

நடிகை மீனாவின் கணவர் கொரோனா தொற்று பாதித்து உயிரிழக்கவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.


tn

குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறந்தவர் நடிகை மீனா.  இவர் கடந்த 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.  இந்த சூழலில் நுரையீரல் தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த மீனாவின் கணவர் வித்யாசாகர் , நேற்றிரவு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். ஆனால் அவர் கொரோனா  காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.

masu

இந்நிலையில் நடிகை மீனாவின் கணவர் கொரோனா தொற்று பாதிப்பு உயிரிழக்கவில்லை என்று அமைச்சர் மா . சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  நடிகை மீனா கணவர் கடந்த டிசம்பர் மாதம் நுரையீரல் பாதித்து கடந்த ஆறு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்ததாகவும் , அவரின் உறுப்பு மாற்ற சிகிச்சை மேற்கொள்ள அவருக்கு பொருந்தும் உறுப்புகள் பெற அரசு சார்பில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  ஆனால் அவருக்கு பொருந்தக்கூடிய உறுப்பு கிடைக்கவில்லை.  அவருக்கு கொரோனா பாதித்தது  பிப்ரவரி மாதம்.  ஆனால் அவர் இறந்தது நேற்று. தற்போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை . இதனால் அவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.