"போதை என்பது தனிமனித பிரச்சனை அல்ல; சமூக பிரச்சனை" - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!!

 
tn

போதைப் பொருள் கடத்தலுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

போதை ஒழிப்பு உறுதி ஏற்கும் நிகழ்ச்சியில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார் .போதை ஒழிப்பு உறுதிமொழி முதலமைச்சரின் மு.க. ஸ்டாலின் வாசிக்க மாணவர்கள் திரும்ப கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்ட நிலையில்,  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

tn

இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "மற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது ஒரு மகிழ்ச்சி இருக்கும். ஆனால், இந்த நிகழ்ச்சியில் அப்படி எனக்கு இல்லை. போதைப் பொருள்கள் பயன்படுத்துவது அதிகமாக இருப்பது எனக்கு  வருத்தம் அளிக்கிறது. போதைப் பொருள் விற்பவர்களை ஒடுக்க அரசு எந்த ஒரு தயக்கமும் காட்டாது;போதை போன்ற சமூக நோய்களை ஒழிக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும். போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவு பாதை. பெற்றோர்கள், ஆசிரியர்களும் சேர்ந்து தான் இதை தடுக்க வேண்டும்;தங்கள் பிள்ளைகளோடு பெற்றோர்கள் அதிக நேரம் பேச வேண்டும்; குழந்தைகளிடம் அன்போடு பேசுங்கள், எந்த  காரணத்திலும் குழந்தைகளை விட்டு விடாதீர்கள். போதை என்பது தனிமனித பிரச்சனை அல்ல; சமூக பிரச்சனை" என்றார்.

tn

தொடர்ந்து பேசிய அவர், போதைப்பொருள் தடுப்பு சட்டத்தை கடுமையாக்க அரசு முடிவு செய்துள்ளது.  போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படவுள்ளது. போதைப்பொருள் விற்பவர்கள் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். போதைப் பொருள் கடத்தலுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு எந்த தயக்கமும் காட்டாது" என்றார்.