சென்னையில் கூடுதல் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்க திட்டம்!!

 
vote

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19 ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்கலாம் என்றும் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார். 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக பிப்.19 ஆம் தேதி நடைபெறும் நிலையில்  வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெறும் என  மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார். 

மாநில தேர்தல் ஆணையம்

தேர்தலில் போட்டிட்டியிடுவதற்காக இதுவரை  2 ஆயிரத்து 563 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி  வார்டு உறுப்பினர் பதவிக்கு 440 பேரும், நகராட்சி வார்டு உறுப்பினருக்கு 803 பேரும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1320 பேரும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர் என்று மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

vote

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில்  கொரோனா  பரவல் காரணமாக சென்னையில் கூடுதல் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்க மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா குறைந்து வரும் நிலையிலும், தடுப்பு நடவடிக்கைகளை  பின்பற்றி  தேர்தலை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. வெப்பமானி , கை சுத்திகரிப்பான் , முகக்கவசம் , முகமுடி ,கை உறைகள் , பிபிஇ கிட்ஸ்,  டி-கட் பேக்ஸ், வாக்காளர்களுக்கான கையுறைகள், பிரவுன் டேப், பஞ்சு மற்றும் குப்பை வாளிகள் போன்றவை மாவட்ட அளவில் கொள்முதல் செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், கொரோனா பரவல் அதிகரிக்காமலும்  இருக்க கூடுதல் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.