ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அதிநவீன ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம் தொடக்கம்

 
omanthurar

சென்னை, ஓமந்தூரார் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ.34.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 
அதிநவீன ரோபோடிக் அறுவை சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

35 கோடி ரூபாய் மதிப்பில் அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட இந்த அறுவை சிகிச்சைக் கருவிகளில் மனித கைகளை போல 4 கைகளை கொண்டுள்ளது , 
இந்த கைகள் உதவியுடன் அறுவை சிகிச்சைகளை துல்லியமாகவும் நுட்பமாகவும் சரியாக செய்யவும் , மருத்துவர்கள் வேறு ஒரு இடத்தில் இருந்தே கைகளை அசைப்பதன் மூலம் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் வகையிலும் இந்தக் கருவிகளானது வடிவமைக்கப்பட்டுள்ளது.

stalin

குறிப்பாக ரோபோவில் பொருத்தப்பட்டுள்ள கேமரா உதவியுடன் நோயாளியின் உடல் பாகங்களை சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் காணவும்  , திரையின் வழியே மருத்துவர்கள் காணும் நோயாளியின் உடல் பாகத்தை அறுவை சிகிச்சை செய்யும் வண்ணமும் அதி நவீன வடிவில் அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

omanthurar

புற்றுநோயியல், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்,  நாளமில்லா சுரப்பி அறுவை சிகிச்சை நிபுணர், இருதய அறுவை சிகிச்சை, கை சீரமைப்பு அறுவை சிகிச்சை ரத்த நாள அறுவை சிகிச்சை உள்ளிட்ட துறைகளில் சிக்கலான அறுவை சிகிச்சைகளை கூட சர்வ சாதாரணமாக செய்யும் வகையில் இந்த ரோபோடிக்  கருவிகளின் செயல்பாடு இருக்கும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.  இந்த கருவியை இயக்குவதற்கு 6 மருத்துவர்கள் தனிப்பயிற்சி பெற்றிருப்பதாக  ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.