காக்கிச்சட்டையை கிழித்து போலீசை கடித்த அஜித் ரசிகர்கள்

 
அன்

அஜித் நடித்த வலிமை திரைப்படம் நேற்று திரைக்கு வந்தது.   முதல் நாள் அதிகாலை காட்சியில் ரசிகர்கள் தியேட்டர்கள் முன்பாக பிளக்ஸ், பேனர்கள் வைத்து தோரணங்கள் கட்டி, மேளதாளங்கள் செண்டை மேளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.

 கொண்டாட்டம் என்கிற பெயரில் சில இடங்களில் விபரீதம் நிகழ்ந்தன.  குண்டு வீச்சு சம்பவமும் நிகழ்ந்தது அதிரவைத்தது.   முதல் காட்சியை தொடங்க தாமதமானதால் தியேட்டரை பிரித்து மேய்ந்து விட்டனர் சில வெறித்தனமான ரசிகர்கள்.  அப்படி இரண்டு வெறித்தனமான ரசிகர்கள் காக்கி சட்டையை கிழித்து போலீசின் தோள்பட்டையை கடித்து வைத்துள்ளனர். 

சி

 திருச்சி மாவட்டத்தில் லால்குடியில் உள்ள அன்பு  தியேட்டரில் நேற்று அதிகாலை காட்சி திரையிடப்பட்டிருக்கிறது.   அப்போது டைட்டில் காட்சி ஓடிக் கொண்டிருந்த போது ரசிகர்கள் பலத்த கரகோஷம் எழுப்பி ஆரவாரித்து கொண்டிருந்திருக்கிறார்கள்.   அப்போது திரைக்கு முன்பாக நின்று நடனமாடிவர்களில் 2 பேர் திரைக்கு முன்பாகவே சர வெடியை கொளுத்த முயற்சி செய்திருக்கிறார்கள்.   இதனால் பதறிப்போன அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் சுரேஷ் ஓடி வந்து இரண்டு பேரையும் தடுத்திருக்கிறார்.   

 லால்குடி காவல் நிலைய போலீசான சுரேஷ், இரண்டு பேரையும் தடுத்துநிறுத்த அதை கேட்காத இரண்டு பேரும் பட்டாசு கொளுத்த முற்பட   இதனால் இரு தரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு இருக்கிறது.   இதில் ஆத்திரப்பட்ட காவலர் சுரேஷ் 2 பேரை சரமாரியாக தாக்கியதால்,  அதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் காவலர் சுரேஷின் காக்கி சட்டையை கிழித்து அவரின் தோள்பட்டையில் கடித்து வைத்து இருக்கிறார்கள்.

இதனால்  லால்குடி   காவல் நிலையத்தில் சுரேஷ் புகார் அளிக்க ,  டால்மியா டால்மியா புரத்தைச் சேர்ந்த அந்த அஜித்தின் ரசிகர்கள் அருண்குமார், கோபிநாத் ஆகிய இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.