உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.752 கோடி நிதி ஒதுக்கீடு!

 
tn

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடிப்படை வசதிகளை மேற்கொள்ள  ரூ.752 கோடி ஒதுக்கீடு செய்து  உள்ளாட்சித் துறை செயலாளர் அமுதா அரசாணை வெளியிட்டுள்ளார்.
tn govt

தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்காக அடிப்படை  மானியத்தை மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரையின் படி தமிழக அரசு விடுவித்துள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரில்  ஒதுக்கப்பட்டுள்ள ரூ.5,080 கோடியில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கு மட்டும் 752 கோடி ரூபாய் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. . உள்ளாட்சி அமைப்புகளில் செய்ய வேண்டிய அடிப்படை வசதிகளை இதன் மூலம் நிறைவேற்றிக் கொள்ளலாம்.  கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளை பல்வேறு அடிப்படை வசதிகள் இதன் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ttn

கிராம ஊராட்சிகளுக்கு ரூ. 424 கோடியும் ,  ஊராட்சி ஒன்றியங்களுக்கு ரூ. 270 கோடியும் ,  மாவட்ட ஊராட்சிகளுக்கு 50 கோடி ரூபாயும்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  தேவையான நிதி, தடையற்ற குடிநீர் , மழைநீர் சேகரிப்பு திட்டங்களை இதன் மூலம் நிறைவேற்றிக் கொள்ளலாம்.  அத்துடன் புதிய கழிவறைகள் கட்டுதல் ,நூலகங்களை ஏற்படுத்தல் ,அங்கன்வாடி மையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், ஊரக பகுதிகள் உள்ள பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துதல் ,தெருவிளக்குகள் , குடிநீர் உள்ள அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி மூலம் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.