பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.912 கோடி ஒதுக்கீடு!!

 
govt

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.912 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை  வெளியிட்டுள்ளது. 

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் மூலம் அனைவருக்கும் வீடு என்பது சாத்தியமாகி வருகிறது. இத்திட்டம் 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு வாயிலாக தொடங்கப்பட்டது. நகர்ப்புற ஏழைகளுக்கு இரண்டு கோடி வீடுகளை கட்டுவதை இலக்காக திட்டம் கொண்டு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. 

tn

வீடற்ற ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் சொந்த வீடு கட்டித்தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கடந்த 2019 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள கிராமப்புற பகுதிகளில் 10 மில்லியன் வீடுகளும்,  நகர்புற பகுதிகளில் 2022 ஆம் ஆண்டிற்குள் 10 மில்லியன் வீடுகள் கட்டித் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.  அனைவருக்கும் வீடு திட்டம் மத்திய அரசின் திட்டம் என்றாலும் மாநில அரசும்  இதற்காக நிதி ஒதுக்கிறது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் திட்டத்தை பிரதமர் வீடு வழங்கும் திட்டம் நகரம் என செயல்படுத்தப்பட்டு வருகிறது.  தமிழ்நாடு நகர்ப்புற குடியிருப்பு மேம்பாட்டு வாரியம் மாநில முகமை நிறுவனமாக உள்ளது . கிராம ஊராட்சிகளில் மாநில ஊரக வளர்ச்சித் துறை அரசு முகமை நிறுவனமாக உள்ளது . இதன் மூலம் 2022 -23 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் 80 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும்.  இத்திட்டத்திற்காக 48 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . வரும் 2024 ஆம் ஆண்டிற்குள் மேலும் 1.72 கோடி வீடுகள் கட்டப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

stalin

இந்நிலையில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்காக ரூபாய் 2.75 லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.  விண்ணப்பித்த பயனாளிகளுக்கு மானியம் வழங்குவதில் சிக்கல் எழுந்த நிலையில் மானியம் வழங்குவதற்காக ரூ. 914 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணையை தற்போது வெளியிட்டுள்ளது.