#JUSTIN சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல 4 நாட்களுக்கு அனுமதி!!

 
sathuragiri

சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

sathuragiri

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலையில்  சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி என மக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும். சுமார் 4,500 அடி உயரத்தில் உள்ள இந்தக் கோயில்  4 திசைகளிலும், மலைகளால் சூழப்பட்டு  64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்டது.இங்கு பௌர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில் மலையேறி சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிப்பது வழக்கம். கொரோனா காலகட்டத்திலும், மோசமான வானிலை, வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட காரணங்களால் பல நேரங்களில் சதுரகிரி மலைக்கு வர அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

இந்த 4 நாட்கள் மட்டும் சதுரகிரி மலைக்கு செல்ல அனுமதி!


இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல நான்கு நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  பௌர்ணமியை ஒட்டி நாளை மறுநாள் முதல் 15ஆம் தேதி வரை பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. கடந்த மாதம் ஆனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு ஜூன் 26 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.