அமித்ஷாவை பதவியிலிருந்து நீக்க வேண்டும் -அமைச்சர் வலியுறுத்தல்!!

 
mano mano

அமித்ஷாவை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று அமைச்சர் மனோ  தங்கராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக மாநிலங்கள் இந்தி மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார்.  இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  மாநில மொழிகள் பற்றிய உரிமை குறித்து பல்வேறு நபர்களும் மத்திய அரசுக்கு எதிராக தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

amit shah

 குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் , ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள்" என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்! இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது. 'இந்தி மாநிலம்' போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் அமித் ஷா  நினைக்கிறாரா?ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது! ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது! ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள். ஆனால் அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள்! ' என்று காட்டமாக தெரிவித்திருந்தார்.



இந்நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், " அரசியல் சாசனத்திற்கு எதிராக பேசிய ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அரசியல் சாசனத்திக்கு எதிரான கருத்துக்களை ஒரு ஒன்றிய அமைச்சர் பேசுவதை ஏற்று கொள்ள முடியாது. ஒரு மொழி என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இந்தியை திணிப்பதற்கு தமிழ்நாட்டில் ஆதரவு கிடையாது" என்று பதிவிட்டுள்ளார்.