பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்க.. ஆளுநருக்கு கடிதம் எழுதிய சாந்தன்..

 
பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்க.. ஆளுநருக்கு கடிதம் எழுதிய சாந்தன்..

பொதுமன்னிப்பு வழங்கி தன்னை விடுதலை செய்யுமாறு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாந்தன், தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.  

ராஜிவ் காந்தி கொலை வழக்கு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வருபவர்களில் ஒருவர் தான்  சாந்தன்.   இவர் தற்போது பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர். என். ரவிக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்.  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் மற்றும் சாந்தன் ஆகிய இருவரும் வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  முருகனின் மனைவி நளினி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது அவர்  பரோலில் வெளியே வந்து தனது உறவினர் வீட்டில் தங்கி இருக்கிறார்.  அண்மையில்  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இதனைச் சுட்டிக்காட்டி  அந்த வழக்கில் கைதான மற்றும் 6 பேரும் தங்களை விடுதலை செய்யும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கிறார்கள்.

பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்க.. ஆளுநருக்கு கடிதம் எழுதிய சாந்தன்..

இந்த நிலையில் சாந்தன் தனது விடுதலை தொடர்பாக சிறை நிர்வாகம் மூலம்,  நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும்,  இலங்கையில் வசித்த தனது தந்தை உயிரிழந்த போது இறுதிச்சடங்கிற்காக கூட தன்னை  அனுமதிக்கவில்லை என்றும்,  தற்போது தாயார் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதாக குறிப்பிட்டிருக்கிறார். மேலும் தாயாரை கவனிக்கவும்,  குடும்பத்தைப் பிரிந்து அனைத்து ஆசைகளையும் மறந்து, சிறை வாழ்க்கை வாழ்ந்து வரும் எனக்கு குடும்பத்தோடு இணைந்து வாழ வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கூறியிருக்கிறார்.