அமைச்சர் அன்பில் மகேஷுக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி!!

 
anbil magesh

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

tn

தமிழக முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இன்று 2022-2023 ஆம் ஆண்டிற்கான மருத்துவ பட்ட மேற்படிப்பு/பட்டைய படிப்பு(MD-MS/DIPLOMA) மற்றும் பல் மருத்துவர் படிப்பு(MDS) மற்றும் தேசிய வாரிய பட்ட படிப்பிற்கான (DNB) தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. 

ttn

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யபட்டுள்ளது. அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் அன்பில் மகேஷின் உடல்நிலை சீராக உள்ளது.  மருத்துவர்களின் ஆலோசனைக்கு பிறகு இன்னும் 2 நாட்களில் அன்பில் மகேஷ் வீடு திரும்புவார். அமைச்சர் அன்பில் மகேஷுக்கு எச்1என்1 வைரஸ் தான் அவருக்கு டெங்கு பாதிப்பு இல்லை, ஊடகங்களில் வரும் செய்தி தவறானது என்றார். முன்னதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.