அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய உதயநிதி..

 
HBD Udhayanidhi Stalin


உதயநிதி ஸ்டாலின், தனது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.  

HBD Udhayanidhi Stalin

திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள், கட்சி தொண்டர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமான நபர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ட்விட்டர் தளத்தில் HBDUdhayanidhiStalin என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. திமுக சார்பில், உதயநிதியின் பிறந்தநாளையொட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  

HBD Udhayanidhi Stalin

இந்நிலையில்,  உதயநிதி ஸ்டாலின், தனது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். அப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்ட பல அமைச்சர்களும், தயாநிதிமாறன் எம்.பி ஆகியோரும் உடனிருந்தனர்.