புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய தமிழக பாஜக தயாராக உள்ளது - அண்ணாமலை

 
Annamalai

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய தமிழக பாஜக தொண்டர்கள் தயாராக இருப்பதாகவும், உதவி தேவைப்படுபவர்கள் அழைக்கலாம் எனவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். 

மாண்டஸ் புயல் நள்ளிரவு 2.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. புயல் கரையை கடந்த நேரத்தில் வீசிய பலத்த காற்றின் காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.  சென்னையில் பெய்த கனமழையினால் சென்னை அண்ணா சாலை , திருவல்லிக்கேணி,  குரோம்பேட்டை,  வடபழனி பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் போல் நீர் தேங்கி இருக்கிறது.  இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல்  பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். சென்னை புறநகர் பகுதிகளில் மழையினால் இருள் சூழ்ந்திருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட நிவாரண முகாம்களில் 3,600 பேர் தங்கவைப்பட்டுள்ளனர்.


இந்நிலையில்,  மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய தமிழக பாஜக தொண்டர்கள் தயாராக இருப்பதாகவும், உதவி தேவைப்படுபவர்கள் அழைக்கலாம் எனவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய தமிழக பாஜக தொண்டர்கள் தயாராக உள்ளனர். உங்கள் குறைகளை கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தொலைப்பேசி எண்களுக்கு அழைத்து தெரிவிக்கவும் என குறிப்பிட்டு, அதற்கான செல்போன் எண்களையும் குறிப்பிட்டுள்ளார்.