பத்திரிகையாளர்களை கொச்சைப்படுத்திய அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!!

 
annamalai

பத்திரிகையாளர்களை கொச்சைப்படுத்திய அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்திய தேசிய லீக் வலியுறுத்தியுள்ளது.

annamalai

இதுகுறித்து இந்திய தேசிய லீக் மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் , "ஊடகங்களுக்கும், செய்தியாளர்களுக்கும் பா.ஜ.கவினர் மிரட்டல் விடுத்து வந்தனர். இவர்களின் மிரட்டலுக்கு பணிந்து சில தனியார் செய்தி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கிய சம்பவங்களும் தமிழ்நாட்டில் அரங்கேறின.மேலும், தொலைக்காட்சி ஊடக விவாதங்களின் போதும் பா.ஜ.சை சேர்ந்த நாராயணன் போன்றவர்கள் பகிரங்கமாகவே நெறியாளர்களுக்கும், விவாதங்களில் பங்கேற்பவர்களுக்கும் மிரட்டல் விடுத்தனர். இதனால் நாராயணன் பங்கேற்கும் விவாதத்தில் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என பல அரசியல் தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.இருப்பினும், மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாடு, கேரளா மாநில ஊடகங்கள் மட்டுமே பா.ஜ.க அரசின் பொய், பித்தலாட்டங்களை வெளிச்சம்போட்டுக் காட்டி வருகிறது. இது பா.ஜ.கவின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது. இதனால் இந்த மாநில ஊடகங்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என தொடர்ச்சியாக முயற்சித்து வருகிறது.

annamalai

இந்நிலையில் தான் கடந்த ஜூலை மாதம் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் பா.ஜ.க சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, "தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சராக எல்.முருகன் பொறுப்பேற்றுள்ளார். எனவே இன்னும் ஆறு மாதங்களில் அனைத்து ஊடகங்களையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுவோம்" என ஊடகங்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்திருந்தார். இதை தொடர்ந்து பல்வேறு பத்திரிகையாளர் சந்திப்பில், செய்தியாளர்களிடம் நீங்கள் நிறுவனம் என கேள்வி கேட்பதோடு, அநாகரீகமாக நடந்து கொள்ளும் செயலை தொடர்ந்து செய்து வந்த நிலையில், சென்னையில் உள்ள கமலாலயத்தில் 27.05.2022  அன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பில், மே 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில் சென்னை பல்வேறு பகுதிகளில் வரவேற்பதற்கு பாஜக சார்பில் விதிமுறைகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது குறித்து இணையதள செய்தியாளர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

annamalai savarkar

இதற்கு, அநாகரீகமாக பதில் அளித்த அண்ணாமலை, செய்தியாளர்களின் பணியை கொச்சைப்படுத்தும் வகையில் 3 ஆயிரம் ரூபாய் வாங்கி கொள்ளுங்கள் என பேசியதோடு, மிரட்டல் விடுக்கும் தோனியில் அண்ணாமலை பேசியிருக்கிறார். மழை, வெயில் என பார்க்காமல், பல்வேறு பேரிடர் காலங்களில் தங்களை உயிரை பணயம் வைத்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மகத்தான பணியை செய்து வரும் செய்தியாளர்கள் குறித்து அண்ணாமலை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியிருப்பதை திரும்ப பெறுவதோடு, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால், தமிழக மக்கள் தகுந்த பதிலடியை வரும் தேர்தல்களில் பாஜகவிற்கு கொடுப்பார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.