1 முதல் 9 வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு கட்டாயம் நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

 
1 முதல் 9 வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு கட்டாயம்  நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது என்றும்,  1 முதல் 9-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும் என்றும்  பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில்  10 , 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை அண்மையில் வெளியானது.  அதில்,  10ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மே 6ம் தேதி முதல் மே.30ம் தேதி வரை பொதுத்தேர்வு  நடைபெற உள்ளது.   11 ம் வகுப்பு மாணவர்களுக்கு மே.9ம் தேதி - மே31ம் தேதி வரையிலும்,   12ம் வகுப்புக்கு மே.5ம் தேதி -  மே.28ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும்  என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதேநேரம் மற்ற வகுப்புகளுக்கு தேர்வு நடைபெறுமா என்பது குறித்த  எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை

பள்ளி, கல்லூரிகள்

இந்நிலையில் நேற்று 1 முதல் 5ஆம் வகுப்புகள் வரை இறுதித் தேர்வு இல்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததாக செய்திகள் வெளியாகின. அத்துடன்  6-முதல் 9ஆம் வகுப்புகளுக்கு மே 5ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.  இந்த நிலையில் இதுகுறுத்து விளக்கமளித்து  புதிய அறிவிப்பு ஒன்றை  பள்ளிக் கல்வித்துறை  வெளியிட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள்

அதில், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு இல்லை என்று வெளியான செய்தி தவறு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல்   1 முதல் 9-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும் எனவும்   தெரிவித்துள்ளது. மேலும், கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் அமலில் உள்ளதால், 8-ம் வகுப்பு வரை அனைவரும் கட்டாயத் தேர்ச்சி செய்யப்படுவார்கள் எனவும் பள்ளிக் கல்வித்துறை  தெரிவித்துள்ளது.