அதிமுக ஈபிஎஸ் அணியில் தேர்தல் பணிக்குழு கூடுதல் பொறுப்பாளர்கள் நியமனம்

 
ep

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கு ஆயத்தமாக தேர்தல் பணிக்குழு கூடுதல் பொறுப்பாளர்களை நியமித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No reason to meet Amit Shah whenever he is in Tamil Nadu: Edappadi  Palaniswami | Cities News,The Indian Express

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27 ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுடன், மாஃபா பாண்டியராஜன், சுதா கே.பரமசிவன், ராஜேந்திரன், சீனிவாசன், சரவணபெருமாள் தேர்தல் பணி பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் பணியாற்றுவார்கள்.

தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு, அதிமுக நிர்வாகிகளும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றிவரும் நிர்வாகிகளும், அதிமுக உடன்பிறப்புகளும் முழு ஒத்துழைப்பு நல்கி சிறப்பான முறையில் தேர்தல் பணிகளை ஆற்றி, அதிமுக வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்திட வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.