ஏப். 21 வரை கூடுதல் பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே..

 
தெற்கு ரயில்வே


பண்டிகை காலத்தில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக பல்வேறு விரைவு ரயில்களில்   வருகிற ஏப்- 21ம்  தேதி வரை கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.  

தமிழ் புத்தாண்டு,  விஷு,  புனிதவெள்ளி உள்ளிட்ட  தொடர்  பண்டிகைகளால்  கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர்.   அவர்களின் வசதிக்காக பல்வேறு  விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் சேர்த்து,  நெரிசல் இன்றி பயணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  தெற்கு ரயில்வேயில் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களில் ஏப்ரல் 12 ,  13 , 14 , 15 ஆகிய நான்கு நாட்களுக்கு கூடுதல் பெட்டிகள் சேர்த்து இயக்கப்பட்டன .  இதன் மூலம்  பல்வேறு ரயில்களில் பயணிக்க  காத்திருப்போர் பட்டியலில் இருந்த பயணிகளுக்கு பயணச்சீட்டு உறுதியாக மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டது.

ரயில்வே

தற்போது சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ள பயணிகள் சிரமமின்றி திரும்பி வர ஏதுவாக  வருகிற 21 ஆம் தேதி வரை கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்பட்டு இயக்கபட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  இதுகுறித்து  தெற்கு ரயொல்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்பட்ட ரயில்களின் விவரம் :
ராமேஸ்வரம்- சென்னை எழும்பூர் ஏப்ரல் 18, 19, 20 தேதிகளில் இயக்கப்படும் விரைவு ரயில் ( 22 602 )
மங்களூர் -  சென்னை எழும்பூருக்கு ஏப்ரல் 17 இல் இயக்கப்படும் விரைவு ரயில் (161 60 )
சென்னை எழும்பூர் - காரைக்காலுக்கு ஏப்ரல் 17-ல் இயக்கப்படும் விரைவு ரயில்( 161 75)
காரைக்கால் - சென்னை எழும்பூருக்கு ஏப்ரல் 16, 18 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் விரைவு ரயில் (161 76 )
தாம்பரம்- நாகர்கோவிலுக்கு ஏப்ரல் 17-ல் இயக்கப்படும் விரைவு ரயில் ( 22 657)
நாகர்கோவில்- தாம்பரத்துக்கு ஏப்ரல் 18ல் விரைவு ரயில் (22 658)
மதுரை - சென்னை சென்ட்ரலுக்கு ஏப்ரல் 17-ல் இயக்கப்படும் விரைவு ரயில் ( 20602)  ஆகியவற்றில் தூங்கும் வசதி கொண்ட ஒரு பெட்டி கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது

ஏப். 21 வரை கூடுதல் பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கப்படும்  - தெற்கு ரயில்வே..

ஏப்ரல் 20 வரை ஒரு பெட்டி கூடுதலாக சேர்த்து இயக்கப்படும் ரயில்கள் :
 சென்னை எழும்பூர்  - கொல்லம் விரைவு ரயில் ( 167 23)
 சென்னை எழும்பூர்- ராமேஸ்வரம் விரைவு ரயில் (22 661)
 சென்னை எழும்பூர் -  ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் ( 16851 - 16852 )
தஞ்சாவூர் - சென்னை எழும்பூர் -  தஞ்சாவூர் (16 866 -  168 65)
சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் ( 12695 -  12696 ) உள்பட 12 விரைவு ரயில்களில் ஏப்ரல் 20ஆம் தேதி வரை கூடுதலாக ஒரு தூங்கும் வசதி கொண்ட பெட்டி இணைக்கப்பட உள்ளது.

ஏப்ரல் 21 வரை கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்பட்ட ரயில்கள் :
கொல்லம் -சென்னை எழும்பூர்  வரையில் (16724)
குருவாயூர் - சென்னை எழும்பூர் விரைவு ரயில் (16128)  உள்பட 5  ரயில்களில் ஏப்ரல் 21ஆம் தேதி வரை கூடுதலாக ஒரு தூங்கும் வசதி கொண்ட பெட்டி சேர்க்கப்பட்டு இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது