பால், பேருந்து கட்டணம் உயர்கிறதா? அமைச்சர் கே.என். நேரு தகவல்!!

 
tn

திமுக அரசை குறைகூறுவதில் அண்ணாமலைக்கும், ஜெயக்குமாருக்குமே போட்டி நடப்பதாக அமைச்சர் கே.என். நேரு விமர்சித்துள்ளார். 

nehru

இந்நிலையில் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே என் நேரு,   "ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு காலத்திலும் பொருளாதார ரீதியாக ஏற்படுகின்ற போது,  மக்கள் அதை சந்திக்க வேண்டி இருக்குமே தவிர  வேண்டுமென்றே திணிப்பதில்லை.  தனியார் கொள்முதல் செய்யும்போது கட்டுப்படி ஆகவில்லை விலை ஏற்ற வேண்டும் என்கிறார்கள் . அதிகாரிகள் சம்பளம் அதிகமாக கேட்க வேண்டும் என்று கேட்கிறார்கள் . எவ்வளவுதான் அரசு மானியம் கொடுத்தாலும் சிறு அளவாவது மாறுதல் வரும். பால் பேருந்து கட்டண உயர்வை நாங்கள் திணிக்கவில்லை அந்தந்த கால கட்டங்களுக்கு ஏற்ப உயர்வது இயல்பான ஒன்றே. அரசு அதிகாரிகள் அதிக சம்பளம் கேட்பதால் பால் விலை,  பஸ் கட்டணத்தில் சிறிதளவு மாற்றம் இருக்கும்.  பால் விலை , பஸ் கட்டணத்தில் மாற்றம் பற்றி முதல்வர் முடிவெடுத்து அறிவிப்பார்" என்று அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

BUS

தொடர்ந்து பேசிய அவர், "திமுக அரசை குறைகூறுவதில் அண்ணாமலைக்கும், ஜெயக்குமாருக்குமே போட்டி நடக்கிறது. எங்கள் மீது குற்றம் சுமத்தவில்லையென்றால், அண்ணாமலையால் கட்சியை நடத்த முடியாது
யார் விமர்சனம் கூறினாலும் மக்கள் திமுக பக்கமே"  என்றார்.