தங்கமே வாங்கிடலாம் போல.. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ. 5000..

 
தங்கமே வாங்கிடலாம் போல.. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ. 5000..

 நேற்றைய தினம் கிலோ ரூ. 3000க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப் பூவானது இன்றைய தினம் மேலும் விலை உயர்ந்து  ஒரு கிலோ ரூ. 5000க்கு விற்கப்படுகிறது.  

கடுமையான பழிப்பொழிவு, பூக்களின் வரத்து குறைவு காரணமாக கடந்த சில தினங்களாகவே பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது.  தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மலர்ச்சந்தையில்  ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ. 5000 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் மதுரையில் நேற்று  இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த  ஒரு கிலோ மல்லிகைப்பூ இன்று ரூ. 3 ஆயிரத்திற்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  இதேபோல், கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர்ச்சந்தையில் மல்லிகைப்பூ கடந்த ஞாயிற்றுக்கிழமை விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ. 5000 ஆக விற்கப்படுகிறது. மேலும், கனகாம்பரம் ரூ. 3000 , பிச்சி பூ கிலோ ரூ. 2,500 என மற்ற பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.  

தங்கமே வாங்கிடலாம் போல.. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ. 5000..

விவசாயிகளை பொறுத்தவரை  கடும் பனிப்பொழிவு  காரணமாக பூக்களின் விளைச்சல் மிகவும் குறைந்திருப்பதாகவும்,  மொட்டுக்கடிலேயே கருகும்  நிலை ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.  வியாபாரிகளை பொறுத்தவரையில் பூக்களின் வரத்து குறைவால்,  கடுமையான விலையேற்றம் இருப்பதாக தெரிவிக்கின்றனர். அத்துடன் சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் தொடங்கி இருக்கின்ற காரணத்தாலும்,  அடுத்தடுத்த முகூர்த்த நாட்கள் இருப்பதாலும் பூக்களின் தேவை அதிகரித்துள்ளதகவும்,  ஆகையால் தான்  விலை உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் தொடர்ந்து நீடிக்கும் எனவும், தற்போதைக்கு குறையும் சூழல் இல்லை என்றும் கூறப்படுகிறது.  அது மட்டுமின்றி அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகே  பூக்களின் விலை குறைவை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.