ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டால் சொத்துக்கள், வங்கி கணக்குகள் முடக்கம்!!

 
ration card ration card

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்களின் சொத்துக்கள், வங்கி கணக்குகள் முடக்கப்படும் என்று ராதாகிருஷ்ணன் எச்சரிகை விடுத்துள்ளார்.

ration shop

ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்கும் விதமாக திருவள்ளூர் மாவட்டம் தமிழக ஆந்திர எல்லையான ஊத்துக்கோட்டை சோதனை சாவடி செங்குன்றம் அரிசி ஆலைகளில் உணவு பாதுகாப்பு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் , ரேஷன் கடைகளில் இலவச பொருட்கள் தேவை இல்லை என்றால் பொதுமக்கள் வாங்க வேண்டாம் .வாங்கி மற்றவருக்கு விற்பதை தவிர்க்க வேண்டும்.  மே மாதம் முதல் தமிழக முழுவதும் சட்ட விரோதமாக கடத்தப்பட்ட 3.65 மெட்ரிக் டன் ரேஷன் அரிசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து 11 ஆயிரத்து 8 வழக்கு பதிவு செய்யப்பட்டு  11,121 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 113 பேர் மீது  குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

ration shop

திருவள்ளூர் மாவட்டத்தில் 63 பேர் கைது செய்யப்பட்டு 8 பேர் குண்டத் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ரேஷன் அரிசி பொருட்கள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது நீதிமன்ற குற்ற வழக்கு பதிவு செய்யப்படும். அத்துடன் அவர்களின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.