"பாஜக அலுவலகத்திற்குச் செல்வதைத் தவிர்க்கவும்" - தொண்டர்களுக்கு திருமா கோரிக்கை!!

 
tn

பாஜக அலுவலகத்திற்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று  தொண்டர்களுக்கு திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

thiruma

விசிக தலைவர் தொல்.திருமாவளவனை  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அம்பேத்கர் குறித்து என்னுடன் விவாதிக்க நீங்கள் தயாரா? என்று கேள்வி எழுப்பினார்.  இந்த விவகாரம் பெரும் பேசும் பொருளான  நிலையில் , அண்ணாமலைக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய விசிக மாநில செயலாளர் சங்கத்தமிழனை , வரும் 26ஆம் தேதி பாஜக அலுவலகம் வரவும் என்று அண்ணாமலை அழைப்பு விடுத்தா. ர் அத்துடன் திருமாவளவனின் இடது கை,  வலது கை யாராக இருந்தாலும் பாஜக அலுவலகத்திற்கு வந்து அவர்கள் விரும்பும் புத்தகத்தை வழங்கலாம்.  மேலும் திருமாவளவன் சொல்லும் நாளில் விவாதத்தையும் வைத்துக்கொள்ளலாம்.  அம்பேத்கர் அவர்களுடைய சித்தாந்தத்தை முழுமையாக பின்பற்றக்கூடிய தலைவர் பாரதப் பிரதமர் மோடி அவர்கள் என்பதே விவாதத்தின் தலைப்பு என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

annamalai

இதையடுத்து தொல் திருமாவளவன் கையெழுத்திட்ட இரண்டு புத்தகங்களை பாஜக தலைவர் அண்ணாமலையிடம் விசிக மாநிலச் செயலாளர் சங்கத்தமிழன் கொடுக்க உள்ளதாக அறிக்கை வெளியானது.  `இந்து மதத்தின் புதிர்கள் - மக்கள் தெளிவுறுவதற்கான ஒரு விளக்கம்’ என்ற அம்பேத்கர் எழுதிய புத்தகத்தையும் `டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் - பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு தொகுதி- 8’ என்ற புத்தகத்தையும்  .புத்தகத்தையும் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியானது.  இதையடுத்து பாஜக அலுவலகத்தில் பாதுகாப்பு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.



இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன், "பாஜக தமிழகத் தலைவருக்கு புரட்சியாளர் அம்பேத்கரின் இந்துவத்தின் புதிர்கள் எனும் புத்தகத்தை வழங்கிட பாஜக அலுவலகத்திற்குச் செல்வதைத் தவிர்க்கும்படி இளஞ்சிறுத்தைகள் மாநில செயலாளர் சங்கத்தமிழன் அவர்களிடம் கூறியுள்ளேன். எனவே, இளஞ்சிறுத்தைகள் அங்கே செல்வதைத் தவிர்க்கவும். அவர் இதுவரை 20000 புத்தகங்களைப்  படித்திருக்கிறார் எனும்போது அவற்றில் புரட்சியாளர் அம்பேத்கரின் நூல்களும் இருக்கலாம். எனினும் அவருக்குத் தேவையெனில் அம்பேத்கரின் நூல்களை அஞ்சலில் அனுப்பி வைப்போம். அல்லது அவர் அம்பேத்கர் மணி மண்டபத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளட்டும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக சென்னை கோயம்பேட்டில் பாஜகவினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது என்பது கவனிக்கத்தக்கது. இதனால் இதுபோன்ற மோதல் போக்கை தவிர்க்கவே திருமா தொண்டர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.