'ஒத்த ஓட்டு பாஜக' - மீண்டும் நிரூபித்த பவானிசாகர் வேட்பாளர்!

 
tn

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  வாக்கு எண்ணிக்கை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது இருப்பினும் எந்த ஒரு அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

 tn

திமுக  கூட்டணி வேட்பாளர்கள் பெரும்பான்மையான இடங்களில் வெற்றிவாகை சூடிவருகின்றனர். அதேபோல் மாநகராட்சியில் 307 இடங்களிலும், நகராட்சியில் 1192 இடங்களிலும், பேரூராட்சியில் 2312 இடங்களிலும் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. சில இடங்களில் அதிமுகவும் வெற்றியை பதிவு செய்து வருகிறது. 

tn

இந்நிலையில் சேலம் மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சி 11வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நரேந்திரன் ஒரே ஒரு ஒட்டு பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் நரேந்திரன்  குடும்பத்தினரோ, நண்பர்களோ கூட வாக்களிக்கவில்லை என்பது தான் இதில் ஹைலைட். கிடைத்த அந்த ஒரு ஓட்டும்  நரேந்திரன் தனக்காக பதிவு செய்தது என்பதால் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளாராம்.  ஏற்கனவே ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒத்த ஓட்டு பெற்ற பாஜக என்ற டேக் லைன் ஒட்டிக்கொண்ட நிலையில் மீண்டும் அது நிரூபணம் ஆகியுள்ளது என எதிர்க்கட்சியினர் எள்ளி நகையாடி வருவது குறிப்பிடத்தக்கது.