#BREAKING "ஜெயலலிதா உயிரை காப்பாற்றி இருக்கலாம்" - வெளியான பரபரப்பு தகவல்!!

 
tn

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில்  தமிழக அரசு ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தது.  ஆறுமுகசாமி ஆணையம் அப்பல்லோ மருத்துவர்கள் ,ஊழியர்கள் ,ஜெயலலிதா இல்லத்தின்  பணியாளர்கள், உதவியாளர்கள், சசிகலா, ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 100ற்கும் மேற்பட்டோரை விசாரித்தது.  விசாரணையின் இறுதியில் ஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசிடம் முதலமைச்சர்கள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அறிக்கையை சமர்ப்பித்தது. 

jayalalitha

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமியின் அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.  எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை, சசிகலா வெளியேற்றப்பட்டு, 2012ல் மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்ததிலிருந்து அவர்கள் இருவருக்கும் இடையே சுமுக உறவு இல்லை, .அமெரிக்காவில் இருந்து வந்த டாக்டர் சமீன் சர்மா, ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்திருந்தார். ஆனால் அது நடக்கவில்லை,  ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கவிடாமல் சசிகலா தடுத்துள்ளார், ஜெயலலிதாவின் உயிரை காப்பாற்றி இருக்க முடியும்.  இங்கிலாந்து மருத்துவரின் வாய்வழி கருத்தை ஏற்று, இதய அறுவை சிகிச்சை தேவையில்லை என அப்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.அமெரிக்க மருத்துவரின் ஆலோசனையை ஏற்றிருந்தால் முதல்வரின் உயிரை காப்பாற்றியிருக்க முடியும். சசிகலா - ஜெயலலிதா இருவர் இடையே சுமூக உறவு இல்லாததால்,சுயலாபத்துக்காக ஜெயலலிதாவுக்கான ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்து இருக்கலாம் என்று கூறியுள்ளது. 

jaya

இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தில் முக்கிய திருப்பமாக .2016 டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என அப்போலோ மருத்துவமனை அறிவித்திருந்தது.  சாட்சியங்கள் அடிப்படையில் ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் 4ம் தேதி மதியம் 3 மணி முதல் 3.30 மணிக்குள் இருக்கலாம் என்று கூறியுள்ள நிலையில்,  சசிகலா, கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவு. இவர்கள் மீது ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது தெரியவந்துள்ளது.