நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, சென்னையில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தொடக்கம்..

 
வாக்குச் சீட்டு - பூத் சிலிப்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி  சென்னையில் உள்ள 200 வார்டுகளில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி இன்று தொடங்கியது.

தமிழகம் முழுவதும்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது.  இதனையொட்டி தேர்தல்  பணிகள்  தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  அந்தவகையில் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் தேர்தலை சுமூகமாக நடத்த,  ஆணையர் ககந்தீப் சிங் பேடி தலையில், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்  பல்வேறு நடவடிக்கைகளை மேகொண்டு வருகின்றனர்.

சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் 61 லட்சத்து 73 ஆயிரத்து 112  வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில்  30 லட்சத்து 49 ஆயிரத்து 529 பேர்ஆண் வாக்காளர்கள்,31 லட்சத்து 21 ஆயிரத்து 954 பேர் பெண் வாக்காளர்கள். 1,629 பேர்  மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவர்.  மேலும் சென்னை  மாநகராட்சியில் மட்டும் வாக்குப்பதிவிற்காக  5 ஆயிரத்து 794 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.  தேர்தல் நடவடிக்கைகளை வீடியோ பதிவு செய்ய  6 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள்  பொருத்தப்பட  உள்ளதாகவும் கூறப்படுகிறது.

17 ஆம் தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வரும் நிலையில்,.  அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில்   சென்னையில் உள்ள 200 வார்டுகளுக்கும் பூத் சிலிப் கொடுக்கும் பணி இன்று முதல் தீவிரம் அடைந்துள்ளது.  சுமார் 3 ஆயிரம் மாநடராட்சி ஊழியர்கள் பூத் சிலிப் வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  

தேர்தல்

வீடு வீடாகச் சென்று வரும் திங்கள் கிழமை வரை பூத் சிலிப் வழங்கும் பணிகள் நடைபெற உள்ளன. பூத் சிலிப் கொடுக்கும்போது வாக்காளர்களிடமிருந்து கையெழுத்து பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 5,539 பாகங்கள் உள்ளன. ஆகையால்  பாகங்கள் வாரியாக பூத் சிலிப் பிரிக்கப்பட்டு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.  மாநகராட்சி ஊழியர்கள் பூத் சிலிப் வழங்கச் செல்லும் போது வீட்டில் ஆள் இல்லாமலோ, வீடு பூட்டப்பட்டு இருந்தாலோ ,அவர்கள், வாக்குப்பதிவு நாள் என்று பூத் சிலிப்பை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தந்த வார்டுகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு முன்பாக ஊழியர்கள் முகாமிட்டு பூத் சிலிப்பை வழங்குவார்கள் எனவும்,  பூத் சிலிப்பு பெறாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி கேட்டுக் கொண்டுள்ளார். நாளையுடன் பூத் சிலிப் வழங்கும்  பணி நிறைவுபெற்றுவிடும் என்றும  அவர் தெரிவித்திருக்கிறார்.