#Breaking: தீவிர புயலாக இருந்த மாண்டஸ், புயலாக வலுவிழந்தது..

 
#Breaking: தீவிர புயலாக இருந்த மாண்டஸ், புயலாக வலுவிழந்தது.. 

தென்மேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக மையம் கொண்டிருந்த மாண்டஸ் புயல் தற்போது புயலாக வலுவிழந்துள்ளதாக வானிலை  மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியிள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம்( டிச.7) இரவு 11 .30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது. இது மெல்ல  மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம், புதுவை, தெற்கு ஆந்திராவை ஒட்டி வரும். அதன்பின்னர், இன்று  (டிச.9) புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே மாண்டஸ்  கரையைக் கடக்கும் என்றும்  வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.  இதனையொட்டி  தமிழ்நாட்டின் அநேக இடங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய கூடும் என்றும் கூறியிருந்தது.  

#Breaking: தீவிர புயலாக இருந்த மாண்டஸ், புயலாக வலுவிழந்தது.. 

தொடர்ந்து மாண்டஸ் புயல் நகர்வுகளை கண்காணித்து வரும் வானிலை மையம், அதனை வெளியிட்டு வருகிறது. அதன்படி   இன்று (டிச.9)  காலை 11.30  மணி நிலவரப்படி,  தீவிர புயலாக இருந்த மாண்டஸ், தற்போது புயலாக வலுவிழந்திருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.  சென்னைக்கு தென்கிழக்கே 260   கிலோமீட்டர் தொலைவிலும்,  காரைக்காலுக்கு வடகிழக்கே 180  கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருப்பதாகவும்,  மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் மாண்டஸ் புயல்  மெல்ல வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை

புயல் கரையை நெருங்கும் போது காற்றின் வேகம் மணிக்கு அதிகபட்சமாக 100 கி.மீ ஆக இருக்கும் என்றும்,  கரையை கடக்கும் போது மணிக்கு 100 கி. மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.  இன்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்ட நிலையில் மாண்டஸ் புயல் , காற்றின் வேகம் குறைந்ததால் நாளை அதிகாலை கரையைக் கடக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  பின்னர் மாண்டஸ் புயல் நாளை முற்பகல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறையும் என்று கூறப்படுகிறது