பட்ஜெட் கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய கேள்விகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

 
rajinikanth and cm stalin

பட்ஜெட் கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய கேள்விகள் குறித்து திமுக எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 29ம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.  இந்த கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய கேள்விகள் குறித்து திமுக எம்.பி.க்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:  குஜராத் வன்முறை குறித்து 'பிபிசி' வெளியிட்ட ஆவணப்பட சர்ச்சை குறித்து விவாதிங்களை முன் வைக்க வேண்டும். இந்திய பங்கு சந்தையில் அதானி குழுமத்தால் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பாக வெளிவந்துள்ள அறிக்கை குறித்தும் கேள்வியெழுப்ப வேண்டும். நீட் மசோதா, மதுரை எய்ம்ஸ், தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து விவாதங்கள் முன்வைக்க வேண்டும். சேது சமுத்திர திட்டம், தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, என்.எல்.சி. நிறுவனத்தில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டது குறித்து குரல் எழுப்ப வேண்டும் மற்றும் தமிழ்நாடு அரசால், மத்திய அரசுக்கு எழுதப்பட்டுள்ள கடிதங்களின் நிலை குறித்தும் கேள்வியெழுப்ப வேண்டும். இவ்வாறு கூறினார்.