அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி வளாகத்தில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர்

 
mk stalin

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி வளாகத்தில் சுமார் 8 கோடியே 74 இலட்சம்  மதிப்பிலான இரண்டு கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

தமிழ்நாடு சங்கங்களின் பதிவு சட்டத்தின் படி 1975 ஆம் ஆண்டு அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி 1981 ஆம் நிறுவப்பட்டது. இதில் அமைச்சுப்பணி முதல் அகில இந்திய அலுவலர்கள் வரை அனைத்து தரப்பு அரசு அலுவலர்களுக்கும் பயிற்சி வழங்கபட்டு வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்  இந்த அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி மூலம் யுபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வருகிறார்கள்.

anna collage


 இந்நிலையில் மாணவர்களின் கூடுதல் வசதியாக சுமார் 8.74 கோடி ரூபாய் மதிப்பிலான குளிர்சாதன வசதியுடன் கூடிய 6 ஸ்மார்ட்  வகுப்பறைகள் மற்றும் 15 விடுதி அறைகள் புதிதாக கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்ற நிலையில், விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு  மாணவர்களின் பயன்பாட்டிற்கு அந்த கட்டிடத்தை திறந்து வைத்தார்.இந்த நிகழ்வில் மனிதவள மேம்பாட்டு துறை மற்றும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி இயக்குனரும் தலைமைச செயலாளருமான இறையன்பு  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.