கிங்ஸ் பன்னோக்கு மருத்துவமனை கட்டுமான பணிகள் - முதலமைச்சர் திடீர் ஆய்வு

 
mk stalin mk stalin

சென்னை கிங்ஸ் பன்னோக்கு மருத்துவமனையில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார் 

சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் 500 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் 4.89 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து தற்போது கட்டுமானப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை கிங்ஸ் பன்னோக்கு மருத்துவமனை கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.  இந்த ஆய்வின் போது தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, சென்னை மேயர் பிரியா மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.