சர்வதேச பர்னிச்சர் பூங்காவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

 
cm stalin

இந்தியாவிலேயே முதல் முறையாக தூத்துக்குடியில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் அமையவுள்ள சர்வதேச பர்னிச்சர் பூங்காவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 

தென் மாவட்டங்களில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் தூத்துக்குடி சிப்காட் பகுதியில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சர்வதேச பர்னிச்சர் பூங்கா அமைப்பதற்காக ஆயிரத்து150 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான அத்தனை பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச பர்னிச்சர் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.

tuti park

இறக்குமதியை குறைத்து உள்நாட்டிலேயே மரப்பொருட்கள் உற்பத்தியை பெருக்கும் வகையிலும், சர்வதேச தரத்தில் பர்னிச்சர்கள் தயார் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையிலும் பர்னிச்சர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.  மர அறுவை ஆலை, பர்னிச்சர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள், ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள் உள்ளிட்ட சுமார் 100 நிறுவனங்கள் வரை இந்த பூங்காவில் இடம்பெற உள்ளது. இந்த பூங்கா மூலம் சுமார் 4,755கோடிக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், சுமார் மூன்றரை லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக 33 நிறுவனங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. 

furniture


 
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வ.உ.சி.யின் பொருளாதார கனவை நிறைவேற்றும் வகையில் தூத்துக்குடியில் அறைகலன் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது என்றார். கிராமங்கள் நகரங்களாகவும், நகரங்கள் மாநகரங்களாகவும் மாறவேண்டும் என்பதே இலக்கு எனவும், சர்வதேச அறைகலன் பூங்கா அமைக்க தூத்துக்குடியை தேர்ந்தெடுத்தத்ற்கு முக்கிய காரணமே, தென் மாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி, பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டது என்றார். இந்திய அளவில் மூன்றாவது பெரிய துறைமுகத்தை கொண்ட தூத்துக்குடியில் அறைகலன் பூங்கா அமைப்பது கூடுதல் சிறப்பு எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

stalin

முன்னதாக ஸ்பிக் நிறுவனத்தில் நாள்தோறும் 22 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 150கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சூரிய ஒளி மின் நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.