மாண்டஸ் புயல் பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

 
stalin

மாண்டஸ் புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆலோசனை செய்து வருகிறார். 

மாண்டஸ் புயல் நள்ளிரவு 2.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. புயல் கரையை கடந்த நேரத்தில் வீசிய பலத்த காற்றின் காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.  சென்னையில் பெய்த கனமழையினால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.   சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட நிவாரண முகாம்களில் 3,600 பேர் தங்கவைப்பட்டுள்ளனர்.

இதனிடையே சென்னையில் பல்வேறு பகுதிகளில் புயல் மற்றும் மழையால் பாதிகப்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். இதன் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 
மாண்டஸ் புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை செய்து வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.