கபடி, சிலம்பம் போட்டிகளுக்கு தமிழக அரசு சிறப்பு கவனம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

 
cm stalin cm stalin

கபடி, சிலம்பம் ஆகிய பாரம்பரிய விளையாட்டு போட்டிகளுக்கு தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழக விளையாட்டு வீரர்கள், விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான சந்தேகங்களை தொலைபேசி மூலம் கேட்டறிய 'ஆடுகளம்'  என்ற பெயரில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உதவி மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதேபோல் சர்வதேச, தேசிய அளவில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு விருதுகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதல்வர் கோப்பை மாநில விளையாட்டுப் போட்டிகளுக்கான இணையதளப் பதிவையும்  தொடக்கிவைத்தார்.


இதனையடுத்து விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிராண்ட் மாஸ்டர்கள் மூலம் இலவசமாக நேரடியாக பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கபடி, சிலம்பம் ஆகிய பாரம்பரிய போட்டிகளுக்கு சிறப்பு கவனம் வழங்கப்பட்டுள்ளது. உலகளவில் விளையாட்டில் தமிழக வீரர்கள் பங்கேற்று சாதனை புரிய வேண்டும் என்பதால் இது போன்ற விழா நடக்கிறது. செஸ் ஒலிம்பியாட் மூலம் கிராமம் முதல் நகரம் வரை விளையாட்டுப் போட்டிகள் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது. அக்டோபரில் மாவட்ட அளவிலும், ஜனவரியில் மாநில அளவிலும் முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் நடைபெறும். இவ்வாறு கூறினார்.