திமுக தலைவராகி 4 ஆண்டுகள் நிறைவு - கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை

 
mk stalin

திமுக தலைவராக பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். 

திமுகவின் செயல் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 28-ம் தேதி திமுக தலைவராக பொறுப்பேற்றார். அவர் திமுக தலைவராக பொறுப்பேற்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், 5வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இதனையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இந்நிலையில், திமுக தலைவராக பொறுப்பேற்று 5வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.