கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

 
stalin tripute

கலைஞர் கருணாநிதியின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினா காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, கே. என் நேரு, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்,  கனிமொழி, வைரமுத்து ஆகியோர் மரியாதை செலுத்தினர். நினைவிடத்தில் பணியாற்றும் 30 பேருக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.  பள்ளி மாணவர்கள் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.

kanimozhi

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழ்மொழி , தமிழ்வளர்ச்சி , தமிழ்நாடு வளர்ச்சிக்கு வாழ்நாள்  முழுவதும் உழைத்தவர் கலைஞர் கருணாநிதி. அவர் இல்லை என்றாலும் ஒவ்வொரு மக்கள் மனதிலும் பதிந்து உள்ளார். தலைவர் முக.ஸ்டாலின் ஆட்சி கருணாநிதி ஆட்சியின் நீட்சி தான் என்றார். 

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை வைரமுத்து 99 ஆண்டுகளுக்கு முன்னாள் கருணாநிதி என்ற திருவுருவம் தமிழ்நாட்டில் பிறந்து இருக்காமல் இருந்தால் தமிழ்நாடு எப்படி வளர்ந்து இருக்காது, அவரின் உணர்வை தமிழர்கள் அனைவரும் போற்ற வேண்டும் என்றார். தமிழை எல்லோரும் வாசிக்க கலைஞர் தான் காரணம் என்ற அவர், தமிழ்மொழி உள்ளவரை கலைஞர் வாழ்வார். மேலும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருதினை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.