சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை

 
MK Stalin MK Stalin

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 266வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழகத்தில் இருந்து ஆங்கிலேயே ஆட்சியை எதிர்த்து விடுதலைக்காக போராடிய தலைவர்களில் தீரன், சின்னமலை குறிப்பிடத்தக்கவர். கிழக்கிந்திய கம்பெனியினரின் ஆதிக்கத்தை விரும்பாத சின்னமலை தொடர்ந்து எதிர்த்து வந்தார். தீரன் சின்னமலையை போரில் வீழ்த்த முடியாது என்று கருதிய ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி வலையில் சிக்கவைத்து சின்னமலையை செய்து சங்ககிரிக் கோட்டைக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்று தூக்கிலிட்டனர். தீரன் சின்னமலையின் தியாகத்தைப் போற்றி நினைவு கூறும் வகையிலும் அவரது வீரதீர செயல்களை இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ளத்தக்க வகையிலும் அவரது பிறந்தநாள் விழா தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும்  அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

mk stalin

இந்நிலையில், அவரது 266வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள தீரன் சின்னமலையின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதன் அருகே அமைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக  அமைச்சர்கள், செந்தில் பாலாஜி, சக்ரபானி, முத்துசாமி, ராஜகண்ணப்பன், சுவாமிநாதன் உள்ளிட்டோரும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.