டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் அறிவிப்பு

 
CM

 

மேலாலயா மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் குடும்பத்திற்கு இரங்கள் தெரிவித்துள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். 

தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் மேகலாயாவில் நடந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.  அவருக்கு வயது 18.  அசாம் மாநிலம் குவாஹாட்டியில் இருந்து ஷிலாங்குக்கு செல்லும் வழியில் அவர் சென்ற கார் மீது லாரி மோதியதில் விஸ்வா தீனதயாளன் மற்றும் கார் ஓட்டுனர் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  மற்றும் மேலும் மூவர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  மாநில மற்றும் தேசிய அளவில் டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்று பல்வேறு விருதுகளை வென்றுள்ள இவர் சென்னை லயோலா கல்லூரியில் பிகாம் படித்துள்ளார். இந்நிலையில், விஷ்வா தீனதயாளன் குடும்பத்திற்கு இரங்கள் தெரிவித்துள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். 

Dheena thayal

 இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரக்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர்  விஷ்வா தீனதயாளன் நேற்று மேகாலயா மாநிலத்தில் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கச் சென்றபோது, அங்கு சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயரமடைந்தேன். எதிர்காலத்தில் எத்தனையோ உலக சாதனைகளைப் படைப்பார் என்று நாம் எண்ணியிருந்த நிலையில், மிகவும் வருந்தத்தக்க வகையில் அவர் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். இது அவரது பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எத்தகைய துயரத்தை அளித்திருக்கும் என்று எண்ணிப் பார்க்கிறேன். அவர்களுக்கு என்னுடைய வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும், தெரிவித்துக்கொள்கிறேன்.  செல்வன் விஷ்வா தீனதயாளன் அவர்களுடைய குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 10 இலட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.