20 நடமாடும் காய்கனி அங்காடி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
வேளாண் துறை சார்பில் பொதுமக்களின் வீட்டிற்கே சென்று விற்பனை செய்யும் வகையில் 20 நடமாடும் காய்கனி அங்காடிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் வேளாண்மைக்கென தனி நிதி நிலை அறிக்கையினை தாக்கல் செய்து பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையில் சார்பில் கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, செங்கல்பட்டு, திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் நுகர்வோரின் இல்லத்திற்கே சென்று பண்ணைக் காய்கறிகளை விற்பனை செய்திடும் பொருட்டு 40 இலட்சம் ரூபாய் மதிப்பில் 20 நடமாடும் காய்கனி அங்காடிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, செங்கல்பட்டு, திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் நுகர்வோரின் இல்லத்திற்கே சென்று பண்ணைக் காய்கறிகளை விற்பனை செய்திடும் வகையில் 20 நடமாடும் (1/2) pic.twitter.com/2QlsFEV2iM
— TN DIPR (@TNDIPRNEWS) December 7, 2022
இதேபோல், முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் ரூ.15.40 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்து, கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகளையும், நெல்லுக்கு பின் பயறு சாகுபடி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயறு விதைகளையும் வழங்கினார். மேலும், வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவித்தவாறு, கரும்பு விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒன்றிய அரசு அறிவித்த நியாயமான மற்றும் ஆதார விலையை காட்டிலும் கூடுதலாக டன்னுக்கு ரூ.195/- சிறப்பு ஊக்கத்தொகைக்கான ஆணைகளை வழங்கினார்.


