எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தக்க மரியாதையும், அன்பும், ஆதரவையும் அளிப்போம் - முதலமைச்சர் டுவீட்

 
stalin

எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை இச்சமூகத்தில் எவ்விதப் பாகுபாடும், ஒதுக்குதலுமின்றித் தகுந்த மரியாதையுடனும், மதிப்புடனும் நடத்தி அவர்களுக்கு அன்பையும், ஆதரவையும் அளிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். 

இன்று உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, ஹெச்வி வைரஸுக்கு எதிராக போராடவும், ஹெச்ஐவி வைரஸுன் வாழ்ந்துவரும் மக்களுக்கும், ஹெச்வி நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.


இந்நிலையில், உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 2022ஆம் ஆண்டின் உலக எய்ட்ஸ் நாளுக்கான சமப்படுத்துதல் எனும் கருப்பொருளை சிறப்பாக செயல்படுத்தும் வகையில், எய்ட்ஸ் பரவல் குறைவதை உறுதி செய்து, அதனால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைக் களைய அனைவரும் ஒன்றிணைந்துப் பணியாற்றுவோம். எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்குத் தக்க மரியாதையும், அன்பும், ஆதரவும் அளிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.